அசாம் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிப்புகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: மந்திரி அமித் ஷா உறுதி!


அசாம் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிப்புகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: மந்திரி அமித் ஷா உறுதி!
x

இன்னும் 5 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் இல்லாத மாநிலமாக அசாம் மாறும் என அமித் ஷா உறுதியளித்தார்.

கவுகாத்தி

அசாம் மாநிலத்தை இன்னும் 5 ஆண்டுகளில் வெள்ளம் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று திறந்து வைத்தார். அதன் பின் அவர் பேசியதாவது:-

சட்டசபை தேர்தலின் போது, அசாமில் பயங்கரவாதம் மற்றும் வேலைநிறுத்தம் இல்லாத மாநிலமாக மாற்றினோம் என்று கூறினேன். இப்போது எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் தாருங்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தை வெள்ளம் இல்லாத மாநிலமாக அரசு மாற்றும்.

வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நீண்ட கால திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். குறுகிய கால நடவடிக்கைகளை மட்டும் அரசு பார்க்கக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஜூலை மாதத்தில், அசாம் மாநிலத்தின் 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5.39 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story