மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு: அமித்ஷா அறிவிப்பு


மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு: அமித்ஷா அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 11:27 AM IST (Updated: 1 Jun 2023 11:43 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.

இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மணிப்பூர் சென்றார். நான்கு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள அமித்ஷா, தொடர்ந்து அமைதியை நிலை நிறுத்த ஆலோசனைகளை மேற்கொண்டார். பின்னர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா கூறியதாவது:

* மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.

*மணிப்பூர் தொடர்பான ஆறு வழக்குகளை சிபிஐ விசாரிக்கும்

*மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக்குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு

*விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.


Next Story