மும்பையில் தாக்குதல் நடத்தப்படலாம்; போலீஸ் வாட்ஸ்அப் எண்ணிற்கு மீண்டும் வந்த எச்சரிக்கை
சோமாலியாவில் நடந்த தாக்குதல் போல் இந்தியாவில் நடத்தப்படலாம் என மும்பை போலீஸ் வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி வந்துள்ளது.
மும்பை,
மும்பையில் தாக்குதல் நடத்தப்படலாம் என மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு மையத்திற்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது.
அதில், சோமாலியாவில் நடந்த தாக்குதல் போல் இந்தியாவில் தாக்குதலை தவிர்க்க பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தும் வகையில் வாட்ஸ்அப் தகவல் வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள செய்தி எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சோமாலியா தலைநகா் மொகடிஷுவில் கடந்த 21-ந் தேதி பிரபலமான விடுதிக்குள் நுழைந்து, அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினா்.
கடந்த வாரம் மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப்பிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து "26/11" பாணியில் பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுச்செய்தி வந்தது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என அச்சுறுத்தல் வந்தது குறிப்பிடத்தக்கது.