கூலிப்படையை ஏவி மகனை கொன்ற முதியவர்


கூலிப்படையை ஏவி மகனை கொன்ற முதியவர்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி:-

பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா டவுன் பகுதியை சேர்ந்தவர் மருதப்பா (வயது 72). இவரது மகன் சங்கமேஷ் (வயது 38). இவர் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மருதப்பா, மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சங்கமேஷ் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து தாக்கினர். மேலும் தலையில் கல்லைப்போட்டு சங்கமேசை கொலை செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் முரகோடா போலீசார், விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் சங்கமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சங்கமேசை அவரது தந்தையே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

அதாவது, மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான சங்கமேஷ், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதப்பா, கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கூலிப்படையாக செயல்பட்ட மஞ்சுநாத் உள்பட 2 பேரை கைது செய்தனர். மருதப்பா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Next Story