லாரி மீது கார் மோதல்! 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
ஆந்திராவில் கார் மீது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விஜயவாடா
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. முந்திச் செல்லும் போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்த உடல்கள் மீட்கப்பட்டன. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story