ஆந்திராவில் பயங்கரம் 10-ம் வகுப்பு மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்


ஆந்திராவில் பயங்கரம் 10-ம் வகுப்பு மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்
x
தினத்தந்தி 17 Jun 2023 3:45 AM IST (Updated: 17 Jun 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் 10-ம் வகுப்பு மாணவன், நண்பர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டான்.

விஜயவாடா,

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரஜோல் கிராமத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அமர்நாத்.

இவனது நண்பரான வெங்கடேஸ்வர ரெட்டி என்பவர், கடந்த சில மாதங்களாக அமர்நாத்தின் அக்காவை சீண்டி வந்துள்ளார். அதனால் வெங்கடேஸ்வர ரெட்டியை அமர்நாத் கடுமையாக கண்டித்துள்ளார்.

தீ வைப்பு

இந்நிலையில் நேற்று டியூசன் முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்த அமர்நாத் மீது வெங்கடேஸ்வர ரெட்டியும், வேறு சில நண்பர்களும் திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் மாணவன் அமர்நாத் அலறித் துடித்தார். அதைக் கண்ட சாலையில் சென்றவர்கள், தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் மாணவனை குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதற்கு முன்பு அமர்நாத் அளித்த மரண வாக்குமூலத்தில், தனக்கு தீ வைத்த வெங்கடேஸ்வர ரெட்டி உள்ளிட்ட நண்பர்களின் பெயரை கூறினான்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவன் எரித்துக்கொல்லப்பட்டதற்கு தெலுங்கு தேச எம்.எல்.ஏ. அனகானி சத்யபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story