வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மேலும் ஒரு வாய்ப்பு


வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மேலும் ஒரு வாய்ப்பு
x
தினத்தந்தி 4 March 2023 10:15 AM IST (Updated: 4 March 2023 10:16 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு-

போக்குவரத்து வீதி மீறல்கள்

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை வசூல் ஆகாமல் இருந்தது. எனவே இந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்தலாம் என்று போக்குவரத்து போலீசார் கூறி இருந்தார்கள்.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதியில் இருந்து 11-ந் தேதி வரை, 9 நாட்கள் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்படி, 9 நாட்களில் பெங்களூருவில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் அபராதம் வசூல் ஆகி இருந்தது.

மற்றொரு வாய்ப்பு

50 சதவீத தள்ளுபடியில் அபராதம் கட்டுவதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், மேலும் சில நாட்கள் இந்த தள்ளுபடியை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில், கர்நாடக போக்குவரத்து போலீசார் சார்பில், கர்நாடக சட்ட சேவை ஆணையத்திடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இதனையடுத்து 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்துவதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியில் அபராத தொகையை செலுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கர்நாடக போக்குவரத்து போலீசார் கூறி உள்ளனர்.

இன்று தொடங்கி...

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், "பெங்களூருவில் 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் விதிக்கும் முறைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போதும் அபராதத் தொகையை பாக்கி வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல்18-ந் தேதி வரை மேலும் 15 நாட்கள் 50 சதவீத சலுகை முறையில் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தி கொள்ளலாம். இதன் மூலம் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் உள்ள பாக்கி வசூல் செய்யப்படும்" என்றனர்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மாநிலம் முழுவதும் இன்றும் ரூ.1,000 கோடி அபராத வசூல் ஆகாமல் உள்ளது. இந்த தொகையை வசூலிக்கும் நோக்கி இந்தசலுகையை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story