பெங்களூரு மகாதேவபுராவில் அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமித்த ராஜகால்வாய் மீட்பு


பெங்களூரு மகாதேவபுராவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமித்த   ராஜகால்வாய் மீட்பு
x

பெங்களூரு மகாதேவபுராவில் அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமித்த ராஜகால்வாய் மீட்கப்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு மகாதேவபுராவில் அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமித்த ராஜகால்வாய் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெங்களூருவில் மழையால் பாதிப்புக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். அதன்படி, பெங்களூருவில் தொடர்ந்து 2-வது வாரமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மகாதேவபுரா மண்டலத்தில் நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.

மகாதேவபுரா மண்டலத்தில் உள்ள கசவனஹள்ளி அருகே வள்ளியம்மா லே-அவுட்டில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ஷெட்டுகள் இடித்து அகற்றப்பட்டது.

ராஜகால்வாய் மீட்பு

கிரீன்வுட் ரெசிடன்சி வளாகத்தில் 150 மீட்டருக்கு ராஜகால்வாய் மீது சிமெண்டு சிலாப்புகள் போட்டு மூடப்பட்டு இருந்தது. அந்த 150 மீட்டர் ராஜகால்வாய் மீது அமைக்கப்பட்ட காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றி, கால்வாயை அதிகாரிகள் மீட்டனர்.

அதுபோல், மாரத்தஹள்ளி போலீஸ் நிலையம் பின்புறம் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்திருந்த மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

அளவீடு பணிகள்

மேம்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு ராஜகால்வாயில் கழிவுநீர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கசவனஹள்ளியில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது. ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் குறியீடு வைத்து சென்றுள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகள் இன்று (வியாழக்கிழமை) இடித்து அகற்றப்பட உள்ளது.


Next Story