'ஆர்டர்' செய்த 10 நிமிடத்தில் வீடு தேடி வரும் மது...!! - கொல்கத்தாவில் அறிமுகம்
ஆன்லைன் வழியாக ‘ஆர்டர்’ செய்த 10 நிமிடத்தில் வீட்டுக்கே மது விநியோகிக்கும் வசதி கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே சென்று மது வினியோகிக்கும் சேவையை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் வீட்டுக்கே மது வினியோகிக்கும் வசதி கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'பூஸி' இந்த சேவையை தொடங்கி இருக்கிறது.
வாடிக்கையாளரின் வீட்டுக்கு அருகில் உள்ள மதுக்கடையிலேயே மதுவை பெற்று 10 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரிடம் சேர்க்கும் வகையில் இந்த நிறுவனத்தின் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காள கலால் துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இது 'குடி'மகன்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெறும் என 'பூஸி' நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story