ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் கொண்டு வரப்படுகிறதா? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
ரிசர்வ் வங்கியின் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை தொடர்ந்து இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் வேளையில் மீண்டும் பழைய படி 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இது முற்றிலும் 'ஊக' அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள், ரிசரவ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இப்போது ஏதுமில்லை என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
Related Tags :
Next Story