இனி 4ஜி போன்கள் கிடையாதா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல்
3ஜி 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது
புதுடெல்லி,
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டில் 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் 3ஜி 5ஜி, 4 ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல்கள் வேவெளியானது.
இந்த நிலையில் 3ஜி 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ,அது போன்று எந்த உத்தரவும் வழங்கவில்லை என விளக்கமளித்துள்ளது.
டெல்லியில் மத்திய தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றேனர்.
இதில், 5 ஜி அதிவேக இணையதள சேவைக்காக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story