இசை கச்சேரியில் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு தகராறு: காங்கிரஸ் பிரமுகர் கத்தியால் குத்தி கொலை


இசை கச்சேரியில் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு தகராறு: காங்கிரஸ் பிரமுகர் கத்தியால் குத்தி கொலை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இசை கச்சேரியில் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

இசை கச்சேரியில் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி விழா

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே சட்டசபை ெதாகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சீனிவாஸ் வெற்றி பெற்றார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சீனிவாஸ் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று முன்தினம் தரிகெரே டவுனில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாராட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. அப்போது பாட்டு கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. அதில் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு தரிகெரேவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் வருண் என்பவருக்கும், கபாப் மூர்த்தி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் அவர்கள் பாட்டு கச்சேரி முடிந்து அங்கிருந்து சென்றனர். வருண் தனது நண்பர்கள் மஞ்சு, சஞ்சு ஆகியோருடன் சிவமொக்கா ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கபாப் மூர்த்தி அவர்கள் 3 பேரையும் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

பரிதாபமாக இறந்தார்

அப்போது கபாப் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வருணை வயிற்றுப்பகுதியில் குத்தினார். இதில் அவர் நிலைசரிந்து கீழே விழுந்தார். இதனை தடுக்க மஞ்சு, சஞ்சு ஆகியோரையும் கபாப் மூர்த்தி கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

அருகில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்்தனர். வருண் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தரிகெரே டவுன் போலீசார் வருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தரிகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆய்வு செய்தார். கொலையாளியை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

அந்த தனிப்படையினர் கபாப் மூர்த்தியை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தரிகெரே டவுன் பகுதியில் பதுங்கி இருந்த கபாப் மூர்த்தியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதமாக கொலை நடந்தது தெரியவந்தது. கச்சேரியில் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தரிகெரே பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story