அருணாச்சலபிரதேசம்: ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்து
மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இட்டாநகர்,
அருணாச்சலபிரதேச மாநிலம் மேற்கு சியங் மாவட்டம் டியூட்டின் என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் மேற்கொண்டிருந்தது.
காலை 10.45 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விபத்து நடத்த பகுதிக்கு விரைந்துள்ளனர். விபத்து நடத்த மலைப்பகுதிக்கு பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும் வனப்பகுதி வழியாகவும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் பயணித்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Related Tags :
Next Story