மணீஷ் சிசோடியா கைது : முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்


மணீஷ் சிசோடியா கைது : முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
x

மணீஷ் சிசோடியா கைதுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்-மந்ஹ்டிரி மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ. சிபிஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாக விசாரணைக்கு ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டார். 2-ம் கட்ட விசாரணைக்கு சம்மன் அனுப்பிய நிலையில் சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி இருந்தார் மணீஷ் சிசோடியா. இந்த வழக்கில் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது சிபிஐ.

இந்த நிலையில் மணீஷ் சிசோடியா கைதுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

மணீஷ் சிசோடியா குற்றமற்றவர் . அவரை கைது செய்ததற்கு பின்னால் அரசியல் நோக்கமுள்ளது மணீஷ் கைது செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் பார்க்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்.இது நமது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும். நமது போராட்டம் வலுவடையும்.என தெரிவித்துள்ளார்.


Next Story