வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளிக்கும் அசாம்: பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன


வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளிக்கும் அசாம்: பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன
x

வடகிழக்கு மாநிலமான அசாம், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 48 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பிரம்மபுத்திரா, பராக் மற்றும் அவற்றின் துணை நதிகள் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், இதுவரை 82 பேர் பலியாகி இருக்கின்றனர்.

24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காணாமல் போயுள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர், 27 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகளும் மீட்கப்பட்டுள்ளன.

பராக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கரிம்கஞ்ச், கச்சார் மாவட்டங்கள் குறிப்பாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 'ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து பராக் பள்ளத்தாக்கின் சில்சார் பகுதிக்கு மொத்தம் 105 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 பிரிவுகள் வந்துள்ளன. அவை மீட்பு பணிகளை மேற்கொள்ளும்' என முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். தக்க சமயத்தில் இந்த உரிய உதவியை அளித்ததற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story