அசாம்: கவுகாத்தி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயிலில் தீ விபத்து
பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில், பராமரிப்பு பணிக்காக ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பத்தில் உயிரிழப்போ அல்லது தீக்காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்டிங் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story