அசாம் வெள்ளம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு : 18 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
கவுகாத்தி,
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நிலைமையும் மோசமடைந்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 54 ஆக உள்ளது என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்28 மாவட்டங்களில் 18.94 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அசாமின் ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ரஜார் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசிய தேவைகள் தவிற மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்