அசாம்: வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு - 11 பேர் காயம்
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரட்டாபரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள கட்லிச்சேரா பகுதிக்கு இளைஞர்கள் சிலர் வாகனத்தில் சுற்றுலா சென்றுக் கொண்டிருந்தனர். கரீம்கஞ்ச் மாவட்டம் ரதாபரி பகுதி அருகே வாகனம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரட்டாபரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர் முதலில் கட்லிச்சேராவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
Related Tags :
Next Story