அசாம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்


அசாம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்
x

அகில இந்திய இளைஞர் காங்கிரசின் அசாம் மாநில தலைவரான அங்கீதா தத்தா, அமைப்பின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

ஸ்ரீனிவாஸ் பாலின அடிப்படையில் தனக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், 6 மாதங்களாக தன்னை துன்புறுத்தி வருவதாகவும் அங்கீதா தத்தா புகார் அளித்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே புகார் தெரிவித்தபோதும் கட்சியின் தலைமை ஸ்ரீனிவாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் கட்சிக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அங்கீதா தத்தாவை 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்-செயலாளர் தாரிக் அன்வர் இதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ள பா.ஜ.க., பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் காங்கிரஸ் முன்மாதிரி என்று சொல்வது வெற்றுத்தனமானது என சாடியுள்ளது.


Next Story