போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பதிவான சொத்து குவிப்பு வழக்கு ரத்து


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பதிவான சொத்து குவிப்பு வழக்கு ரத்து
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பதிவான சொத்து குவிப்பு வழக்கு ரத்து செய்யவேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

மங்களூருவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் கங்கிரெட்டி. இவர் அந்த பகுதியை சேர்ந்த சீனிவாஸ் பிரசாத் என்பவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறி அவர் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரி, அங்கிருந்து எந்தவொரு ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. ஆனால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் என கூறினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்கிரெட்டி மீது பதிவான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story