டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது


டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
x

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். அப்போது குறிப்பிட்ட 2 பயணிகளின் உடமைகளில் ஆயிரத்து 849 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அந்த நகைகளை அதிகாரிகள் கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

அதைப்போல மேலும் 2 பயணிகளின் உடமைகளில் 914.5 கிராம் எடையுள்ள 2 தங்கக்கட்டிகள் இருந்தன. அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள். கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.40 கோடி ஆகும்.


Next Story