தாத்தா வீட்டில் பிரசாதம் சாப்பிட்ட 2 குழந்தைகள் மர்மசாவு
தாத்தா வீட்டில் பிரசாதம் சாப்பிட்ட 2 குழந்தைகள் மர்மசாவு அடைந்தன.
சிக்கமகளூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா நன்னிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரப்பா. இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு ஓபலேஷ் (வயது 5) என்ற மகனும், பிந்து (3) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் ஓபலேஷ் மற்றும் பிந்து ஆகிய இருவரும் தங்களது தாத்தாவான துக்கப்பா வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது துக்கப்பா வீட்டில் பூஜை நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து துக்கப்பாவின் மனைவி ரேணுகம்மா, அவர்கள் இருவரும் பிரசாதம் கொடுத்துள்ளார்.
பிரசாதத்தை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததில் 2 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செல்லகெரே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சொத்து பிரச்சினை காரணமாக குழந்தைகளை கொலை செய்து இருக்கலாம் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து துக்கப்பா மற்றும் அவரது மனைவி ரேணுகம்மா இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.