பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மின்கசிவினால் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது


பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மின்கசிவினால் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 13 Oct 2022 12:30 AM IST (Updated: 13 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

சாகர் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மின்கசிவினால் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா பி.எச்.சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் கடந்த சில நாட்களாக விற்பனை ஏதும் இல்லாமல் மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த விற்பனை நிலையத்தில் இருந்து ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக சாகர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென எாிய தொடங்கியது.

இதையடுத்து பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சாகர் போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர் தீவிபத்திற்காக காராணம் குறித்து பெட்ரோல் நிலையத்திற்குள் சென்று பார்வையிட்டனர்.

இதில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீவிபத்தில் தீயணைப்பு படையினர் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தினால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.


Next Story