பெங்களூரு விமான நிலையத்தில் இட்லி வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம்?
பெங்களூரு விமான நிலையத்தில் இட்லி வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் இட்லி தயாரித்து விற்பனை செய்ய ஒரு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏ.டி.எம். எந்திரம் போல உள்ள அந்த எந்திரத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்து வெளியே வருகிறது. இந்த எந்திரம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த எந்திரத்தை தயாரித்து உள்ளது.
இந்த எந்திரத்தை தயாரித்த ஹிரேமத் என்பவர் கூறும்போது, 'எனது மகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது, நள்ளிரவில் இட்லி தேடி கிடைக்கவில்லை. இதனால் நள்ளிரவில் இட்லி கிடைக்கும் நோக்கில் இந்த எந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். விரைவில் பெங்களூரு விமான நிலையத்திலும் இந்த எந்திரத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்து உள்ளேன்' என்றார்.
Related Tags :
Next Story