சிவமொக்கா சிறையில் விசாரணை கைதி மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு


சிவமொக்கா சிறையில் விசாரணை கைதி மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா சிறையில் விசாரணை கைதி மீது தாக்குதல்

சிவமொக்கா:

சிவமொக்கா நகரையொட்டிய சோகானே பகுதியில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதியான நாகராஜ் என்பவரை நேற்று முன்தினம் போலீசார் காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த காணொலி காட்சி அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அங்கு வந்த அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளான சச்சின், தர்ஷன், பரசுராம், அனில்குமார், விஸ்வநாத், நாகராஜ் ஆகிய 6 பேரும் சரமாரியாக நாகராஜை தாக்கினர். இதில் நாகராஜ் காயம் அடைந்தார்.

முன் பகை காரணமாக 6 பேரும் சேர்ந்து நாகராஜை தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் துங்காநகர் போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story