'பேக்'கை சோதனை செய்ததால் ஆத்திரம்: அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி மீது தாக்குதல் - விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேர் கைது
‘பேக்’கை சோதனை செய்ததால் ஆத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை தாக்கிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பிகேஹள்ளி:
பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஒருவர், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். அந்த பொருட்களை அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை பிரதிநிதி ஒருவர் கொண்டு வந்தார். மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு விற்பனை பிரதிநிதி திரம்பி சென்றார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி, அவரை தடுத்து நிறுத்தி பேக்கை சோதனை செய்துள்ளார். இதற்கு விற்பனை பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களை வரவழைத்து காவலாளியை தாக்கி உள்ளார். இதில் காவலாளி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சம்பிகேஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை கைது செய்தனர்.
=========