பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!


பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!
x

'இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

புதுடெல்லி,

'இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆவணப்படத்தின் யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி இருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்தநிலையில், ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பா.ஜ.,வுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு பின்னால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி துறையினர் நிறுத்துவார்கள் எனவும் கூறியுள்ளார்.


Next Story