மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி


மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
x

மங்களூருவில் னர்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற உத்தரபிரதேச வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு:-

பலாத்காரம் செய்ய முயற்சி

மங்களூரு பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட மரவூர் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த மைனர்பெண் ஒருவரும் தனது பெற்றோருடன் அந்தப்பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று, மைனர்பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் மைனர்ெபண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அதேப்பகுதியில் கூலி வேலை பார்த்து வரும் உத்தரபிரதேச மாநிலம் காசிபூரை சேர்ந்த கோபால் பின்டா (வயது 23) என்பவர், மைனர்ெபண் தனியாக இருப்பதை அறிந்து, வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

வாலிபர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த மைனர்பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் கோபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மைனர்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து மைனர்பெண்ணின் பெற்றோர், பஜ்பே ேபாலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது ெசய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story