பெல்தங்கடியில் லாரியில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


பெல்தங்கடியில் லாரியில் கடத்த முயன்ற  1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

பெல்தங்கடியில், லாரியில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;

வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கலியா அருகே கேருகட்டே பகுதியில், லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பெல்தங்கடி உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு நின்ற லாரியில் சோதனை நடத்தினர். அதில் லாரிக்குள் மூட்டைகள் இருந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அன்னபாக்கியா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய இலவச ரேஷன் அரிசி என்பதும், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி அரிசி ஆலைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்க கடத்த முயன்றது தெரியவந்தது.

ரேஷன் அரிசி பறிமுதல்

இதையடுத்து அதிகாரிகள் 1½ டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல்

செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவரான அதே பகுதியை சேர்ந்த ரமேசை பெல்தங்கடி போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.18 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story