தபால் நிலையத்தில் திருட முயற்சி


தபால் நிலையத்தில் திருட முயற்சி
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொரப்பி தபால் நிலையத்தில் திருட முயற்சித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவமொக்கா:-

சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பஸ் நிலையம் அருகே தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிைலயில் வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலக நேரம் முடிந்து தபால் நிலையத்தை பூட்டி விட்டு சென்றனர். நேற்று முன்தினம் காலை தபால் நிலையத்தை ஊழியர்கள் திறக்க வந்தனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து திருட முயன்றது தொியவந்தது. இதில் தபால் அலுவலகத்தில் புகுந்த மர்மநபர்கள் முன்பக்க பூட்டை மட்டும் உடைத்து உள்ளனர்.பின்பக்க பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் திரும்ப சென்றுள்ளனர். இதனால் உள்ளே இருந்த பணம் மற்றும் அலுவலக பொருட்கள் தப்பியது. இது குறித்து சொரப் தபால் நிலைய தலைமை அதிகாரி லூயிஸ் டிசோசா, சிகாரிப்புரா துணை பிரிவு தபால் துறை மேற்பார்வையாளர் பிரகலாத் நாயக்கிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து பிரகலாத் நாயக், சொரப் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story