ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் இன்று இந்தியா வருகை; இருநாட்டு பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை


ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் இன்று இந்தியா வருகை; இருநாட்டு பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை
x

ஆஸ்திரேலிய நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரியுமான ரிச்சர்ட் மார்லஸ் இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரியுமான ரிச்சர்ட் மார்லஸ் இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மந்திரி ராஜ்நாத் சிங் உடன் அவர் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஆஸ்திரேலியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடந்த மாதம் பதவியேற்ற பிறகு, ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் முதல் உயர்மட்ட பயணம் இதுவாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆஸ்திரேலிய மந்திரி மார்லஸ், ஜூன் 20-23 வரையிலான நாட்களுக்கு இந்தியாவில் இருப்பார். இந்த பயணத்தின் போது, அவர் வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ் ஜெய்சங்கரையும் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story