தற்கொலை எண்ணத்தை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் பேச்சு


தற்கொலை எண்ணத்தை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:19+05:30)

தற்கொலை எண்ணத்தை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் தெரிவித்துள்ளார்.

மண்டியா:-

மண்டியாவில் மின்ஸ் நிறுவன வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் பேசியதாவது:-

வாழ்க்கை முறையில் திடீரென்று ஏற்படும் மாற்றங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை பணப்பிரச்சினை ஆகியவை தற்கொலைக்கான காரணமாக இருக்கிறது. இதற்கு மன அழுத்தமே காரணம். இந்த மன அழுத்தத்தை போக்கவேண்டும் என்றால் கவுன்சிலிங் மிகவும் அவசியம். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தற்கொலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுபடி கடந்த ஒரு ஆண்டில் 1.50 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன்படி சராசரியாக ஒருநாளைக்கு 480 பேர் தற்கொலை முடிவை தேடி கொள்கின்றனர். நாளுக்கு நாள் இந்த தற்கொலை சம்பவம் அதிகரித்து காணப்படுவதால் இதை தடுக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story