வீட்டின் பின்புறம் கஞ்சா வளர்த்தவர் கைது


வீட்டின் பின்புறம் கஞ்சா வளர்த்தவர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:30 AM IST (Updated: 9 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா டவுனில் வீட்டின் பின்புறம் கஞ்சா வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா;


சிவமொக்கா டவுன் 16-வது வார்டு பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவர் தனது வீட்டின் பின்புறம் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக சிவமொக்கா கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கலால் துறை அதிகாரிகள், ேபாலீசார் உதவியுடன் ராஜப்பாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பயிரிட்டிருந்த 12 அடி உயர கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜப்பாவை போலீசார் கைது செய்தனர்


Next Story