அசாமில் மேம்பாலத்துக்கு கீழே இறகுப்பந்து களம்


அசாமில் மேம்பாலத்துக்கு கீழே இறகுப்பந்து களம்
x

image courtesy: himantabiswa twitter

அசாமில் மேம்பாலத்தின் கீழே காலியாக இருந்த இடத்தை பொதுமக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்கும் விதமாக, ஒரு இறகுப்பந்து விளையாட்டு களம் அமைக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் ஜோர்கட் நகரில் சமீபத்தில் புதிதாக ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தின் கீழே காலியாக இருந்த இடத்தை பொதுமக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்கும் விதமாக, அங்கு செயற்கை தளத்துடன் ஒரு இறகுப்பந்து விளையாட்டு களம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தொழிலதிபரான அகர்வல்லா என்பவர், அசாம் பேட்மிண்டன் சங்க செயலாளரான தனது தந்தை திகந்த புரகோஹைன் பெயரில் இந்த பேட்மிண்டன் களத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். அந்த களத்தின் ஒரு பகுதி சுவரை, நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் உள்ளிட்ட நாட்டின் பிரபல பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் படங்கள் அலங்கரிக்கின்றன.

இந்த பேட்மிண்டன் களத்தை திறந்துவைத்த முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்த புதுமையான யோசனையை பாராட்டியுள்ளார்.


Next Story