பா.ஜனதா பெண் பிரமுகரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி


பா.ஜனதா பெண் பிரமுகரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பெண் பிரமுகரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுப்படி செய்யப்பட்டது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் 545 பணி இடங்களுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்து இருந்தது. இதுகுறித்து விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார் கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகரான திவ்யா ஹகரகி, ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான திவ்யா கலபுரகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் திவ்யா மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் திவ்யா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் திவ்யாவுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திவ்யாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story