சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் மேல் முறையீடு; குஜராத் அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்


சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் மேல் முறையீடு; குஜராத் அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 3 April 2023 10:06 AM GMT (Updated: 3 April 2023 11:00 AM GMT)

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

சூரத்,

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்தது.

ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்கவும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும் ராகுல் காந்தியின் தண்டனையும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.


Next Story