பால்கர் சாதுக்கள் கொலை வழக்கு; சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனுவை விசாரனைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்


பால்கர் சாதுக்கள் கொலை வழக்கு; சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனுவை விசாரனைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
x

பால்கரில் சாதுக்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனுவை சுப்ரிம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று உள்ளது.

மும்பை,

கொரோனா ஊரடங்கின் போது காந்திவிலியை சேர்ந்த 2 சாதுக்கள் டிரைவருடன் குஜராத் மாநிலத்துக்கு இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றனர். பால்கர் மாவட்டம் கட்சின்சிலே கிராமத்தில் 3 பேரையும் குழந்தை திருட்டு கும்பல் என நினைத்து பொது மக்கள் தாக்கினர். பொது மக்கள் தாக்கியதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். சாதுக்கள் மற்றும் டிரைவர் திட்டமிட்டு தாக்கப்பட்டதாக சிலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என சாதுக்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

போலீசார் சாதுக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை ஒருதலைபட்சமாக விசாரித்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். சாதுக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மாநில அரசு சம்மதம் தெரிவித்து இருப்பதாக மனுதாரர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பால்கர் சாதுக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.


Next Story