ராஜாஜிநகர்-யஷ்வந்தபுரம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை


ராஜாஜிநகர்-யஷ்வந்தபுரம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை
x

ராஜாஜிநகர்-யஷ்வந்தபுரம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜிநகர்: பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் இருந்து யஷ்வந்தபுரம் செல்லும் சாலையில் எப்.டி.ஐ. சர்க்கிள் அருகே கடந்த சில வாரங்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து, சர்க்கிள் பகுதியை கடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலை ஸ்தம்பித்துவிடுகிறது.

இதற்கு காரணம் கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துவது என கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார், அந்த சாலையில் கனரக வாகனங்களுக்கு தடைவிதித்துள்ளனர். மேலும் அந்த சர்க்கிள் பகுதிக்கு முன்பு உள்ள சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் நின்றுகொண்டு கனரக வாகனங்களை மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தற்போது போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.Next Story