காரில் ரூ.2¾ லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது!


காரில் ரூ.2¾ லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய  2 பேர் கைது!
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் கடத்திய ரூ.2¾ லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர்.

மங்களூரு-

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் கடத்திய ரூ.2¾ லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர்.

போலீசார் வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே புறவழிச்சாலையில் (பைபாஸ்) மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து மங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் எம்.டி.எம்.ஏ. எனும் போதைப்பொருள் இருந்தது.

போதைப்பொருள் பறிமுதல்

இதுபற்றி காரில் இருந்த 2 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பரங்கிபேட்டையை சேர்ந்த அஸ்ரப் (வயது 43), பெர்மனூரை சேர்ந்த தாவூத் பர்வேஸ் (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.77 லட்சம் மதிப்பிலான 55 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 2 செல்போன்கள், ரூ.3,230 ரொக்கம், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.06 லட்சம் ஆகும்.

கைதான 2 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story