பெங்களூரு, மைசூரு ரெயில் நிலையத்திற்கு 5 நட்சத்திர அந்தஸ்து
பெங்களூரு, மைசூரு ரெயில் நிலையத்திற்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையம் மற்றும் மைசூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் உணவு தரம் பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியது.
இதில் மைசூரு, பெங்களூரு ரெயில் நிலையங்கள் தரமான, பாதுகாப்பான உணவு தயாரித்து வினியோகிப்பது தெரியவந்தது. இதனால் இரு ரெயில் நிலையங்களுக்கும் 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கவுரவப்படுத்தி உள்ளது. மேற்கண்ட தகவலை இந்திய ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, மைசூரு, பெங்களூரு ரெயில்வே நிர்வாகத்தினரை பாராட்டியுள்ளது.
Related Tags :
Next Story