பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் பசவண்ணர், கெம்பேகவுடாவுக்கு சிலை அமைக்க முடிவு
பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் பசவண்ணர், கெம்பேகவுடாவுக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் பசவண்ணர் மற்றும் கெம்பேகவுடா சிலை வைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில், விதானசவுதா வளாகத்தில் பசவண்ணர் மற்றும் கெம்பேகவுடா சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் பசவண்ணர் மற்றும் கெம்பேகவுடா சிலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1-ந் தேதிக்குள் விதானசவுதா வளாகத்தில் பசவண்ணர், கெம்பேகவுடா சிலைகளை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story