மத்திய பிரதேசத்தில் முறைகேடு வழக்கில் வங்கி காசாளருக்கு ஆயுள் தண்டனை
மத்திய பிரதேசத்தில் முறைகேடு வழக்கில் வங்கி காசாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தூர்,
மத்தியபிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் நாராயண்சிங் மக்வானா(வயது 62) என்பவர் காசாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த வங்கியில் நாராயண்சிங் மக்வானா ரூ.51 லட்சத்தை மோசடி செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த முறைகேடு சம்பந்தமான வழக்கு இந்தூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த நாராயண்சிங் மக்வானாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Next Story