பசவராஜ் பொம்மையின் ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது
டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பசவராஜ் பொம்மையின் ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டத்தில் உள்ள நவலகுந்து சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் என்.எச்.ஒனரெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சங்கர் படேல் களம் காண்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கர் படேலை ஆதரித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பற்றி தகவல் பரவியது. இதனால் பா.ஜனதாவினர் பதற்றம் அடைந்தனர்.
மேலும் பசவராஜ் பொம்மை வரும் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்க விமானிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் 2.15 மணி அளவில் பசவராஜ் பொம்மையின் ஹெலிகாப்டர் நவலகுந்து அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பா.ஜனதாவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.