கூடைப்பந்து வீராங்கனையை பலாத்காரம் செய்ய முயற்சித்து மைதானத்தின் மாடியிலிருந்து தள்ளிவிட்டு தப்பியோடிய இளைஞர்கள்!
பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, அந்த பெண்ணை மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் 18 வயது நிரம்பிய ஒரு கூடைப்பந்து வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண்ணை கட்டிடத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில், விளையாட்டு பயிற்சிக்காக சென்ற அந்த பெண்ணை, அங்கிருந்த மூன்று இளைஞர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, விளையாட்டு மைதானத்தின் மேற்கூரையில் இருந்து தள்ளிவிட்டனர்.
அதில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீராங்கனை, இரண்டு கால்களிலும் தாடையிலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடந்தது, மேலும் மூன்று குற்றவாளிகளும் தப்பி ஓடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.