குடிபோதையில் கணவர் சித்ரவதை செய்ததால் மகள்-மகனை தடுப்பணையில் வீசி கொன்று பெண் தற்கொலை


குடிபோதையில் கணவர் சித்ரவதை செய்ததால் மகள்-மகனை தடுப்பணையில் வீசி கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 1 Nov 2022 12:30 AM IST (Updated: 1 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் கணவர் சித்ரவதை செய்ததால் 2 குழந்தைகளை தடுப்பணையில் வீசி கொன்றுவிட்டு பின்னர் தானும் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு;

மதுகுடிக்கும் பழக்கம்

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா ஜானகல் லம்பானிஹட்டி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சாநாயக்(வயது 33). அவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹர்பிதா(27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மானசா(6) என்ற மகளும், மதன்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மஞ்சாநாயக்கிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவி ஹர்பிதாவை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு துன்புறுத்தி உள்ளார்.

குழந்தைகளுடன் தற்கொலை

இந்த நிலையில் மஞ்சாநாயக் வழக்கம் போல் நேற்றுமுன்தினம் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஹர்பிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் தான் இல்லாவிட்டால் தன்னுடைய குழந்தைகள் அனாதை ஆகிவிடும் என்று எண்ணி அவர்களையும் கொன்றுவிட அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் கிராமத்தின் அருகே உள்ள மழலி தடுப்பணை பகுதிக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். பின்னர் அவர் தனது இரு குழந்தைகளையும் தடுப்பணையில் வீசி கொன்றுவிட்டு, பின்னர் தானும் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து ெகாண்டாா். தடுப்பணையில் ஹா்பிதா மற்றும் அவரது குழந்தைகள் பிணமாக மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே இதுகுறித்து ஒசதுர்கா போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர்.

கணவர் கைது

தகவலின்பேரில் ே்பாலீசார், தீயணைப்பு படையினருடன் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் தடுப்பணையில் இருந்து ஹர்பிதா மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மஞ்சாநாயக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story