அசைவம் சாப்பிட்டு அசுத்தம் செய்ததால் தத்தா ஜெயந்தி விழாவில் யாகம் நடத்த வேறு இடம் வேண்டும்
அசைவம் சாப்பிட்டு அசுத்தம் செய்ததால் தத்தா ஜெயந்தி விழாவில் யாகம் நடத்த வேறு இடம் வேண்டும் என கலெக்டரிடம் பஜ்ரங்தள தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு அருகே சந்திரதிரிகோணமலை பாபாபுடன்கிரி மலையில் பிரசித்தி பெற்ற தத்தா குகைக்கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தை இந்து, முஸ்லிம் மதத்தினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே ஆண்டுதோறும் தத்தா ஜெயந்தியையொட்டி தத்தா குகைக்கோவில் அருகே உள்ள இடத்தில் கணபதி யாகம், அனுசியா யாகம் நடத்தப்படும்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு யாகம் நடத்தும் இடத்தில் சிலர் அசைவம் சமைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தாண்டு(2022) வருகிற 28-ந்தேதி தத்தா மாலை அணியும் நிகழ்ச்சி நடக்கிறது.
டிசம்பர் 8-ந்தேதி தத்தா ெஜயந்தியையொட்டி தத்தா குகைக்கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து யாகங்கள் நடத்தி ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்படுகிறது. இந்த நிைலயில் தத்தா குகைக்கோவிலில் வழக்கம்போல் யாகம் நடத்தும் இடத்தில் சிலர் அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு அசுத்தம் செய்ததால் யாகம் நடத்த வேறு இடத்தை ஒதுக்கி தரும்படி பஜ்ரங்தள தொண்டர்கள், சிக்கமகளூரு கலெக்டர் ரமேசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்..
இதை ஏற்ற கலெக்டர் ரமேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.