கார் பழுது செலவு பணத்தை வழங்காததால் காப்பீடு நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


கார் பழுது செலவு பணத்தை வழங்காததால்  காப்பீடு நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார் பழுது செலவு பணத்தை வழங்காததால் காப்பீடு நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவமொக்கா: கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் குருபுரா இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் இந்திரகுமார். இவர் தனது காருக்கு தனியார் காப்பீடு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்து இருந்தார். இதற்காக தனியார் காப்பீடு நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலா ரூ.36 ஆயிரம் செலுத்தியுள்ளார். கடந்த மாதம்(செப்டம்பர்) 27-ந்தேதி பத்ராவதி பரந்தோடு அருகே நடந்த விபத்தில் இந்திரகுமாரின் கார் சேதமடைந்துள்ளது. இதையடுத்து அவரது காரை, ஷோரூமில் பழுது பார்க்க ரூ.1.20 லட்சம் செலவாகியுள்ளது. இதற்கான பணத்தை தரும்படி தனியார் காப்பீடு நிறுவனத்தில் விண்ணப்பித்தார். ஆனால் தனியார் காப்பீடு நிறுவனம் பழுது பார்த்த ஷோரூமுக்கு செலுத்தவில்லை. இதுகுறித்து காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் மஞ்சுநாத், ஊழியர்கள் ஷபி, பிரியங்கா மற்றும் தேவராஜ் ஆகிய 4 பேரிடம் பலமுறை தெரிவித்துள்ளார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் இந்திரகுமாருக்கு செல்போனில் கொலை மிரட்டலும் வந்துள்ளது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள காப்பீடு நிறுவனம், பல்வேறு காரணங்களை கூறி கார் பழுது செலவை ஏற்க மறுத்தது. இதனால் பாதிக்கப்பட்ட இந்திரகுமார், சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

==========


Next Story