பெலகாவி சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை


பெலகாவி சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
x

பெலகாவி சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெலகாவி: பெலகாவி மாவட்டத்தில் ஹின்டலகா மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கித்தூர் தாலுகாவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து மஞ்சுநாத், தனது சிறை அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெலகாவி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story