'போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம்' - மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ.


போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம் - மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ.
x

‘போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம்’ என பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பொன்ஹன் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஸ்வப்பன் மஜூம்தர். இவர் நேற்று வடக்கு 24 பர்கனஸ் பகுதியில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் திரிணாமுல் காங்கிரசார் மேற்கொண்டு வரும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாஜகவினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறினார்.

உங்கள் பணியை சரிவர செய்யாமல் தொடர்ந்து இதே நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தால் நாங்கள் அதை எப்போதும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம். உங்கள் பணியை சரியாக செய்ய்யவில்லை என்றால் போலீஸ் நிலையத்தை ஒரு நாள் தீ வைத்து கொளுத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்' என்றார்.


Next Story