பெங்களூரு: மெட்ரோ பணியின் போது விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


பெங்களூரு: மெட்ரோ பணியின் போது விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
x

காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை ஏற்பதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரெயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது இடிபாடு விழுந்தது. இதில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதனால், படுகாயம் அடைந்த கணவன்-மனைவி, அவர்களது 2 வயது மகன் ஆகிய 3 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தாய், 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை ஏற்பதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story